தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-09 17:34 GMT

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆரணி வட்ட கிளை தலைவர் வெங்கடேசன் தலைமையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை செயலாளர் தரணிகுமரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் க.பெருமாள், ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், 4 ஆண்டுகளாக வெளியிடாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை வெளியிட்டு, பதவி உயர்வு வழங்கிட வேண்டும். உதவியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் வருவாய்த்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட கிளை துணைத்தலைவர் பாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்