தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆவினங்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-12 18:30 GMT

ராமநத்தம்

தமிழக வாழ்வுரிமை கட்சிசார்பில் ஆவினங்குடி பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தலைமை தாங்கினார். திட்டக்குடி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற அரசு அதிகாரிகள் வராததை கண்டித்தும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யாததை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகிகள் தமிழ் செல்வன், பாலு மற்றும் மாவட்ட செயலாளர் அறிவழகன், நிர்வாகிகள் முருகன், கண்ணன், திட்டக்குடி நகர நிர்வாகிகள் சதீஷ், சேகர், சுதாகர், கதிரவன், ஒன்றி நிர்வாகிகள் முருகன், வேல்முருகன், மணிவேல், செந்தாமரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்