தமிழக கவர்னர் கட்டுப்பாடுடன் பேச வேண்டும்

தமிழக கவர்னர் கட்டுப்பாடுடன் பேச வேண்டும்

Update: 2023-06-08 18:45 GMT

தமிழக கவர்னர் கட்டுப்பாடுடன் பேச வேண்டும் என முத்தரசன் கூறினார்.

பேட்டி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், யூரியா ஆகியவை விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேளாண்மை துறை வழிவகை செய்ய வேண்டும்.

நெல்லுக்கான விலை உயர்வை மத்திய அரசு அறிவித்திருப்பது போதுமானது அல்ல. உற்பத்தி செலவை கணக்கீட்டு அதற்கேற்ற வகையில் நெல்லுக்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

கட்டுப்பாடுடன் பேச வேண்டும்

தமிழக கவர்னர் ரவி அரசியல் கட்சி தலைவரை போன்று செயல்படுகிறார். இது நியாயம் இல்லை. கவர்னர் தனது பொறுப்பை விட்டு விட்டு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை போல செயல்படுகிறார். கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.

தமிழக அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை கவர்னர் நடத்தி வருகிறார். தமிழக கவர்னர் கட்டுப்பாடுடன் பேச வேண்டும். இல்லையெனில் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ராஜினாமா

ெரயில்வே துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஒடிசா ெரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்