"1 ரூபாய் கூட தமிழக அரசு ஒதுக்கவில்லை" - ஆர்.டி.ஐ-யில் வெளியான பரபரப்பு தகவல்

13 திட்டங்களுக்கு, கடந்த நிதியாண்டில் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.

Update: 2022-12-27 04:47 GMT

சென்னை,

கடந்த 2021-22 நிதியாண்டு பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 4 ஆயிரத்து 142 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் கல்வி சார்ந்த 33 திட்டங்களுக்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து மதுரையை சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் கார்த்திக் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தார். பெறப்பட்ட பதில்கள் மூலம் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த 33 திட்டங்களில் வெறும் 20 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு, ஆயிரத்து 423 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி சார்ந்த திட்டங்கள் உள்ளிட்ட 13 திட்டங்களுக்கு, கடந்த நிதியாண்டில் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்