தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-01 19:19 GMT

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 11-ந் தேதி வெளியிட்ட அரசாணை எண் 5-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கோரிக்கை அட்டை அணிந்து கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக மண்டல செயலாளர் சார்லஸ் செல்வராஜ் தலைமை தாங்கினார். கிளை தலைவர் சுந்தர்ராஜன் வரவேற்றார். செயலாளர் பிச்சுமணி, பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்