தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-04-21 16:46 GMT

திண்டிவனம் முதல் நகரி வரை புதிய ரெயில்வே வழித்தடம் அமைய உள்ளது.

இப்பகுதியில் நிலம் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான இழப்பீடு சம்பந்தமான கூட்டம் கடந்த 18-ந் தேதி ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் பேசிய போது கலெக்டர் முருகேஷ் பேசுவதை நிறுத்துங்கள், கூட்டத்தில் இருந்து வெளியேறுங்கள் என்றார்.

அதன்பின்னர் வருவாய்த்துறை, போலீசார் மூலமாக விவசாயிகள் சங்கத்தினரை வெற்றியேற்றினர்.

இதனை கண்டித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில துணை தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பலராமன், மாவட்டத் தலைவர் வெங்கடேசன், சி.பி.எம். மாவட்ட செயலாளர் சிவக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத் தலைவர் வீரபத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்