"என்னை தாங்கி நிற்கும் தூண் துரைமுருகன்": முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
திராவிட மாடல் தமிழகத்திற்கு மட்டும் இன்றி நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாடல் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
வேலூரில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது;-
வேலூர் கோட்டையில் நடத்திய புரட்சி தான் சுதந்திர போருக்கு முதன்மையானது. வேலூர் என்பது வீரம், விவேகம், விடுதலையின் அடையாளம்.
என்னை தாங்கி நிற்கும் தூண் துரைமுருகன். அமைச்சர் துரைமுருகனின் மாவட்டம் என்பதால் இங்கு வருவதில் கூடுதல் மகிழ்ச்சி. என்னை இளைஞராக பார்த்த அமைச்சர் துரைமுருகன் இன்று தலைவராக பார்க்கிறார்.
திராவிட மாடல் தமிழகத்திற்கு மட்டும் இன்றி நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாடல்.
காட்பாடியில் 300 ஏக்கரில் புதிதாக தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.58 கோடியில் புதிய தடுப்பணைகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும்" இவ்வாறு அவர் பேசினார்.