அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் பன்முகப் போக்குவரத்து வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படும்
ரூ. 665 கோடியில் 14 புறவழிச் சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும் - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை, கோவை, மதுரை. திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 1,000 இடங்களில் இலவச வை-பை சேவை வழங்கப்படும்
2024-25 நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளில் மினி பஸ் சேவை திட்டம் விரிவு படுத்தப்படும்.
ஜப்பான் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகளை கொள்முதல் செய்து இந்த நிதியாண்டில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
மெட்ரோ ரெயில் விரிவாக்கம்
சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும்
திருப்பரங்குன்றம், திருநீர்மலையில் ரோப்கார் வசதிகள் அமைக்கப்படும்
ரூ.5,718 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
நியோ டைடல் பூங்காக்கள்
தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்
10 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 ஆயிரம் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும் - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு