தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை பேராயர் பதவி ஏற்பு விழா

தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை பேராயர் பதவி ஏற்பு விழா வருகிற 14-ந்தேதி நடக்கிறது என முன்னாள் நீதிபதி வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.;

Update:2023-01-11 00:15 IST

பொறையாறு:

தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை பேராயர் பதவி ஏற்பு விழா வருகிற 14-ந்தேதி நடக்கிறது என முன்னாள் நீதிபதி வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பேட்டி

தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்தரன்திருச்சபையின் (டி.இ.எல்.சி.) நிர்வாகியும், ஜம்மு- காஷ்மீர் மாநில ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான என்.பால் வசந்தகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கிய தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.

இந்த திருச்சபையில் 13-வது பேராயர் ஓய்வு வயதை எட்டியதால் என்னை மதுரை ஐகோர்ட்டு தமிழ் சுவிேசஷ லுத்ரன் திருச்சபையின் நிர்வாகியாக நியமித்து 14-வது பேராயர் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.

14-வது பேராயர் பதவி ஏற்பு விழா

இதன்பேரில் கடந்த மாதம்(டிசம்பர்) 7-ந்தேதி பேராயர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் டாக்டர் கிருஸ்டியன் சாம்ராஜ் 14-வது பேராயராக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது பதவி ஏற்பு விழா வருகிற 14-ந்தேதி(சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலயத்தில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் 15-க்கும் மேற்பட்ட பேராயர்கள், வெளிநாட்டில் இருந்து 5 பேராயர்கள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்