தமிழ் கனவு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சியில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-08-21 19:14 GMT

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளி கலையரங்கத்தில் தமிழ்இணைய கல்விக் கழகம் சார்பில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். தமிழ் கவிஞரும், பாடலாசிரியருமான யுகபாரதி கலந்து கொண்டு தமிழ் பண்பாட்டின் பெருமைகளையும், வளமைகளையும் அது எதிர்கொண்ட சவால்களையும், இளைய தலைமுறையான நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குனர் சிவநடராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், தமிழ்கனவு திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜன், கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி முதல்வர் சண்முகம், தாசில்தார் பிரபாகரன், ஏ.கே.டி.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 630 கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்