பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தளி
உடுமலை உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தளியில் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு கொடுக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது " போலீஸ் நிலையத்தில் கொடுக்கும் மனுக்களுக்கு ஏற்பு ரசீது தருவதில்லை. இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். .எனவே மாவட்ட காவல் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி தளிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கும் முன் வர வேண்டும் என்றனர்.