மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு மையங்களை தாசில்தார் ஆய்வு

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு மையங்களை தாசில்தார் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-27 20:17 GMT

கல்லக்குடி:

லால்குடி தொகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு 137 மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மையங்கள் புள்ளம்பாடி ஒன்றியத்தில் புள்ளம்பாடி, பெருவளப்பூர், கல்லக்குடி என 3 பிர்க்கா பகுதிகளில் உள்ளது. இதில் புள்ளம்பாடி பிர்காவில் புள்ளம்பாடி, நஞ்சைசங்கேந்தி, புஞ்சைசங்கேந்தி, வெங்கடாஜலபுரம், கோவாண்டகுறிச்சி, இ.வெள்ளனூர், புதூர்பாளையம், வாணதிரையான்பாளையம், விரகாலூர், திண்ணகுளம், ஆலம்பாடிமேட்டூர் உள்ளிட்ட 15 கிராமங்களில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு மையங்களை லால்குடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மண்டல துணை தாசில்தார் முருகேசன், புள்ளம்பாடி வருவாய் அலுவலர் பார்வதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்