பெரம்பலூர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 150 பேர் பங்கு பெற்றனர். போட்டியில் ஒட்டுமொத்த பதக்க அணியாக வரதவிகாஸ் பப்ளிக் பள்ளி 135 புள்ளிகள் பெற்று முதல் இடமும், பெரம்பலூர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 115 புள்ளிகள் பெற்று 2-ம் இடமும், பெரம்பலூர் போலீஸ் கோட்ரஸ் கிளப் அணி 95 புள்ளிகள் பெற்று 3-ம் இடமும் பெற்றன.