துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர் செல்வம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...!

துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர் செல்வம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-06-27 06:55 GMT

சென்னை,

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறும் என தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி நடைபெறும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என அறிக்கை விடுத்தார் ஓ.பன்னீர்செல்வம்.

இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பையும் மீறி அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி, தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் மொத்தமுள்ள 74 பேரில் 65 பேர் பங்கேற்றுள்ளனர். 4 பேர் வராத காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். ஆக 5 பேர் மட்டும்தான் வரவில்லை.

அதிமுக சட்டவிதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாத சூழ்நிலையில் தலைமை கழகத்தை வழி நடத்த தலைமை கழக நிர்வாகிகள் உரிமை உண்டு. ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

அதிமுக அடிப்படை விதியே ஓ.பன்னீர் செல்வத்திற்கு தெரியவில்லை. அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்துள்ளார் ஓபிஎஸ், அவர் துரோகத்தின் அடையாளம். அதிமுக பொருளாளராக ஓபிஎஸ் நீடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்பது 11-ம் தேதி பொதுக்குழுவில் தெரியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்