விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-08-30 17:50 GMT

காட்பாடி வட்டாரத்தில் அம்முண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த கரும்பு விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் அட்மா திட்டத்தின் கீழ் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு மேலாண்மை உதவி இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் சரஸ்வதி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்பாடு மற்றும் மண் பரிசோதனை குறித்தும், மேல் ஆலத்தூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் சரவணன் கலந்து கொண்டு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி செய்வதன் தொழில் நுட்பங்கள் மற்றும் பயன்கள் குறித்தும், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்க அலுவலர் வேலாயுதம், காட்டுப்பன்றி விரட்டியை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் பேசினர்.

உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் பிரீத்தா கரும்பில் நாற்று உற்பத்தி செய்தல், நாற்றில் விதை நேர்த்தி பூஞ்சான் கொல்லி பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். கரும்பு அலுவலர் சக்திவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்