நிதி முறைகேடு புகார்:சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணி இடைநீக்கம்துணைவேந்தர் நடவடிக்கை

Update: 2023-08-21 19:59 GMT

கருப்பூர்

நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியரை பணி இடைநீக்கம் செய்து துணை வேந்தர் ஜெகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நிதி முறைகேடு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் கல்வித்துறை பேராசிரியராக நாச்சிமுத்து என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் துறை பேராசிரியராக பணியில் இருந்தபோது நிதி முறைகேடு மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பேராசிரியர் நாச்சிமுத்துவை தற்காலிக பணிஇடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது குறித்து துணை வேந்தர் கூறியதாவது:-

மீண்டும் பணி

பேராசிரியர் நாச்சிமுத்து, மீது பல்வேறு முறைகேடு புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை குழு அமைத்து இவரிடம் விசாரணை நடத்தப்படும். அதில் அவர் குற்றமற்றவர் என நிரூபித்தால் மீண்டும் பணி கிடைக்க வாய்ப்புள்ளது என்றார். இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி பேராசிரியர் நாச்சிமுத்து ஓய்வு பெறும் நிலையில் தற்காலிக பணிஇடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்