மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யாதஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யாத ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-12-30 18:45 GMT


விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலை அகரம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளாத ஊராட்சி செயலாளர் விநாயகம் என்பவரை பணி இடைநீக்கம் செய்ய மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊராட்சி தலைவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்