தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Update: 2023-06-09 16:51 GMT


திருச்சி மாவட்டம் துறையூரைச்சேர்ந்த செல்வராஜ் மகன் சூர்யா (வயது 23) பனியன் தொழிலாளி. இவர் கடந்த சில வருடங்களாக தனது மனைவி மற்றும் 6 மாத குழந்தையுடன் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். நிலையில் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாட்டினால் அவ்வப்போது இருவரும் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த வாரம் சூர்யாவின் மனைவி கோபித்து கொண்டு தனது குழந்தையுடன் சேலம் பகுதியில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. மனைவி பிரிந்து சென்ற வேதனையில் இருந்த சூர்யா பலமுறை செல்போன் மூலம் தன்னுடன் வந்து வாழும்படி கூறிவந்துள்ளார். நேற்று காலை மீண்டும் தனது மனைவிக்கு போன் செய்து வரும்படி அழைத்துள்ளார். ஆனால் மனைவி வர மறுத்ததால் மிகுந்த மன வேதனையில் இருந்த சூர்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்