திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-01-04 17:20 GMT


தாராபுரத்தில் தாய் வீட்டுக்கு செல்ல கணவர் அனுமதிக்காததால் திருமணமான 2 ஆண்டில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இளம் பெண்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மேற்கு கச்சேரி வீதியை சேர்ந்தவர் அரவிந்த். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுவாதி (வயது22). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் தம்பதி இருவரும் தாராபுரத்தில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் சுவாதி திருப்பூரில் உள்ள தனது தாயார் புஷ்பா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கணவரிடம் அடிக்கடி கூறி வந்ததாகவும், ஆனால் அவர் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுவாதி தனது தாயாரை ெதாடர்பு கொண்டு திருப்பூருக்கு அரவிந்தை அழைத்தாலும் வருவது இல்லை என்றும், தன்னையும் திருப்பூர் வர அனுமதிப்பதில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்பின்னர் சில நாட்களாக சுவாதி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அரவிந்த் வேலைக்கு சென்று விட்டார். அப்போது சுவாதி தனது தாயாரிடம் வேதனையை பகிர்ந்துள்ளார். நேற்று முன்தினம் மாலையில் இருந்து இரவு வரை சுவாதியின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அக்கம், பக்கம் உள்ளவர்கள் சுவாதி வீட்டிற்கு சென்று சுவாதி பெயரை சொல்லி கதவை திறக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து சாவி ேபாடும் துவாரம் வழியாக வீட்டிற்குள் பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிைலயில் சுவாதி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து தாராபுரம் ேபாலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சுவாதி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து சுவாதியின் உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆர்.டி.ஓ.விசாரணை

இதனை தொடர்ந்து தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை நிலையத்திற்கு சென்று சுவாதியின் உடலை பார்த்தார். அப்போது அவர் கூறுகையில் "சுவாதிக்கும் இவரது கணவர் அரவிந்துக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. ஏனென்றால் அவர் சுவாதியின் தாயார் வீட்டிற்கு செல்ல அனுமதிப்பதில்லை. மேலும் அவ்வாறு சென்றால் உடனே வந்து விட வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சுவாதி கணவன் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வருகிறது" என்றார். மேலும் அந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்