முதுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடக்கம்
செல்போன் செயலி, ஜி.பி.எஸ். கருவிகளைக் கொண்டு வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.;
நீலகிரி,
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன்பு மற்றும் பின்பு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவது வழக்கம். நடப்பாண்டில் பருவ மழைக்குப் பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று (புதன்கிழமை) தொடங்கியது.
இதில் 150 பேர் 50 குழுக்களாக இணைந்து 6 நாட்கள் இந்த பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட செல்போன் செயலி, ஜி.பி.எஸ். கருவிகளைக் கொண்டு வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பருவமழைக்குப் பின் வனவிலங்குகளை துல்லியமாக கணக்கெடுக்க முடியும் என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.