குருமலையில்மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

குருமலையில்மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-01 19:10 GMT

அடுக்கம்பாறை

குருமலையில்மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

ஊசூர் அருேக குருமலை மலை கிராமத்தில் துணை சுகாதார நிலையம் மற்றும் நியாய விலை கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.

இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் பழனி, ஊசூர் வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த், ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் ஜெய்சங்கர், கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்