வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு
வேலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார்.
வேலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வட்ட வழங்கல் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் போன்ற பிரிவுகளுக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். மேலும் இ-சேவை மைய செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ரேஷன் கார்டு வழங்குதல், சான்றிதழ்கள் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.