24 வார்டுகளில் நகர்மன்ற தலைவர் ஆய்வு
24 வார்டுகளில் நகர்மன்ற தலைவர் ஆய்வு
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
கலெக்டருக்கு உத்தரவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத குறைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குறைபாடுகளை தீர்க்கும் வகையில் 15 நாட்களுக்குள் நகர் மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்து அதை சரி செய்யும் வகையில் கோரிக்கைகளை அரசுக்கு அனுப்புமாறும், அதன் மேல் உரிய நடவடிக்கை எடுக்கவும் கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆய்வு
அதன்படி திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் உள்ள 24 வார்டுகளிலும் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறுகையில், 17,18 ஆகிய வார்டுகளில் தெரு விளக்கு, குடிநீர்வசதி, சாலை வசதி, மற்றும் அரசு நல திட்டங்களை பெற்று தருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் 24 வார்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கான செலவின தொகைகளை அரசுக்கு அனுப்பி அனைத்து பணிகளையும் விரைவில் முடித்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
ஆய்வின்போது நகராட்சி ஆணையர் அப்துல்ஹாரீஸ், பொறியாளர் பிரதான்பாபு மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ரமேஷ்குமார், சுசீலா, சங்கரவடிவேல், நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.