வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு

வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு;

Update: 2022-11-22 05:45 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வு நடைபெற்றது. இதில் வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன், தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் கண்ணன் ஆகியோர் திட்டப்பணிகளை ஆய்வு நடத்தினர். இதில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்பட்ட பாரம்பரிய நெல் விதைகள் செயல் விளக்கம், வரப்பில் உளுந்து விதைகள் பயிரிடப்பட்டிருந்ததை ஆய்வு நடத்தி தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர். மேலும் உளுந்து சான்று விதைப்பண்ணை மூலமாக தரமான விதைகளை கொள்முதல் செய்யுமாறு ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் அம்சவேணி, வேளாண்மை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலமாக தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ராகி, பயறு வகைகள், நிலக்கடலை விதைகள் ஆகியவை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்