சிறுநாடார்குடியிருப்பு ஆலமரத்து சுடலைமாட சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
சிறுநாடார்குடியிருப்பு ஆலமரத்து சுடலைமாட சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகே உள்ள சிறுநாடார்குடியிருப்பு ஆலமரத்து சுடலைமாட சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா ஜூன்.25-ந்தேதி மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், அஸ்திர ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், தனபூஜை, கஜ பூஜை, கன்யா பூஜை, கோபூஜை, கும்ப அலங்காரம், நான்கு கால யாகசாலை பூஜைகள், விசேஷ சாந்தி ஹோமம், தீபாராதனை,சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு யந்தர ஸ்தாபனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு நாடி சந்தானம், நாமகரணம், ஹோமம், யாத்ராதானதத்தை தொடர்ந்து காலை 9 மணிக்கு கடம் புறப்பட்டு ஆலமரத்து சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மகேஸ்வர பூஜை நடைபெற்றது. விழாவில் உடன்குடி பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் மால்ராஜேஷ், யூனியன் கவுன்சிலர் ஜெயகமலா, பேரூராட்சி கவுன்சிலர் சாரதா, சிறுநாடார்குடியிருப்பு ஊராட்சி மன்றத் தலைவி கமலம், தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா, தொழிலதிபர்கள் சகாதேவன், மால்முரளி உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.