ரூ.61½ லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்

Update: 2022-09-22 16:13 GMT


வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது. இதில் 160 விவசாயிகள் 1லட்சத்து 15ஆயிரத்து 390கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 11 வியாபாரிகள் ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.57.27-க்கும், குறைந்தபட்சம் ரூ.45.33-க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.61லட்சத்து 53ஆயிரத்து 968-க்கு வணிகம் நடைபெற்றது.

இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்