போஸ்டர் கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சாலை மறியல்

ஒற்றை தலைமை தொடர்பான போஸ்டர் கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-15 09:12 GMT

சென்னை,

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் ராயப்பேட்டை, அவரது இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை போஸ்டர் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் நந்தனம், ராயப்பேட்டை இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருப்பதாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடம் மேலாக மறியல் போராட்டம் நடந்துள்ளது. பின்னர் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக கூறி தொண்டர்களை கலைந்து செல்ல வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதிமுக ஒன்றை தலைமை குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தும் நிலையில், சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை இல்லத்தில் ஓபிஎஸ், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வரும் நிலையில், ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் கூறப்படுகிறது. எனவே, அதிமுக பொதுக்குழு, செயற்குழு 23-ஆம் தேதி கூடும் நிலையில், ஒற்றை தலைமை குறித்த விவாதம் சூடு பிடித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்