அரசு பள்ளிக்கு 1,000 புத்தகங்கள் வழங்கல்

அரசு பள்ளிக்கு 1,000 புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-06-29 19:17 GMT

அன்னவாசல் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் 1,000 புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இளஞ்சேகரன் தலைமை தாங்கினார். இதில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் திருச்சியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் இணைந்து 1,000 புத்தகங்களை பள்ளிக்கு வழங்கினர். மேலும் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற 3 மாணவிகளின் கல்வி செலவை தன்னார்வ அமைப்பினர் ஏற்றுக்கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்