2 தொழிலாளிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

திருச்செந்தூர் கடலில் தொழிலதிபர் தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த இரண்டு தொழிலாளிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2023-04-07 18:45 GMT

கரூர் மாவட்டம் ராயனூரை சேர்ந்த தொழில் அதிபர் கார்த்திக் மற்றும் அவரது மகன் ஸ்ரீராம் ஆகியோர் திருச்செந்தூர் கடலில் குளித்தனர். அப்போது, ஸ்ரீராம் அணிந்து இருந்த 5 பவுன் தங்க காப்பு கடலில் தவறி விழுந்து விட்டது. உடனடியாக அங்கு இருந்த திருச்செந்தூர் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளரான சிவராஜா (வயது 41), கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளி மணிபிரசாந்த் (30) ஆகியோர் கடலில் விழுந்த நகையை தேடினர். 2 நாட்களுக்கு பிறகு நகையை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து கடலில் விழுந்த தங்கநகையை தேடிப்பிடித்து உரியவரிடம் ஒப்படைத்த சிவராஜா, மணிபிரசாந்த் ஆகிய 2 பேரையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சால்வை அணிவித்து பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்