போலீஸ் வாகனங்களை சூப்பிரண்டு ஆய்வு
மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்களை சூப்பிரண்டு ஆய்வுசெய்தார்.
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களை நல்ல முறையில் பராமரிப்பு செய்திட வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் அவசர உதவி, குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற பாதுகாப்பு பணிக்காக மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்கள், 4 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஆகியவை மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் எந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிட போலீசார் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.