சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடந்தது.;
தவிட்டுப்பாளையம் அக்ரஹாரத்தில் உள்ள சிவாச்சாரியார் நல அறக்கட்டளை மற்றும் ஆதிசைவ சிவாச்சாரியார் நற்பணி மன்றத்தின் சார்பாக ஆண்டுதோறும் சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று காலை நஞ்சை புகழூர் அக்ரஹாரம் புகழூர் ஹாலில் சுந்தரமூர்த்தி நாயனாரின் பஞ்சலோக சிலை புதியதாக ஸ்தாபிதம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.