சன்பீம் சி.பி.எஸ்.இ. இன்டர்நேஷனல் பள்ளியில் கலை விழா
சன்பீம் சி.பி.எஸ்.இ. இன்டர்நேஷனல் பள்ளியில் கலை விழா நடந்தது.
வாலாஜாவில் உள்ள சன்பீம் சி.பி.எஸ்.இ. இன்டர்நேஷனல் பள்ளியில் சன்பீம் பெஸ்ட் கலை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கினார். தாளாளர் தங்கபிரகாஷ், துணைத்தலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வாலாஜா சன்பீம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தினர். இசை, நாடகம், நாட்டியம், ஆடல், பாடல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். பிரமாண்ட மேடையில் லேசர் விளக்குகள் வெளிச்சத்தில் நடந்த மாணவர்களின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில், சன்பீம் பள்ளிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.