கோடைகால பயிற்சி முகாம்

கோடைகால பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

Update: 2023-05-07 19:18 GMT

கருர் மாவட்ட மைய நூலகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவ, மாணவிகளிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும், மாணவர்களின் தனித்திறனை வளர்க்கவும், அவர்களை நூலகத்திற்கு வரவழைக்கும் வகையில் கோடை கால சிறப்பு நிகழ்ச்சிகளாக கதை சொல்லுதல், சதுரங்க பயிற்சி, இசைப்பயிற்சி, யோகாபயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, ஓவியப்பயிற்சி, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த வல்லுனர்களை கொண்ட கோடைகால பயிற்சி முகாம் நாளை (செவ்வாய்கிழமை) முதல் நடைபெற உள்ளது. எனவே கோடைகால பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கரூர் மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்