சின்னவெங்காயம் நடும் விவசாயிகள்

Update: 2023-05-31 15:38 GMT


திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட வடுகபாளையத்தில் வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயம் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளார்கள். இது குறித்து வடுகபாளையத்தை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் கூறியதாவது:- தற்போது வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயம் 2 ஏக்கரில் நடவு செய்துள்ளோம். 1 ஏக்கருக்கு நிலத்தை உழுவதற்கும் மற்றும் பாத்தி கட்டுவதற்கும் ரூ.15 ஆயிரமும், ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.45. ஒரு ஏக்கருக்கு 600 கிலோ விதை வெங்காயம் தேவைப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு விதை வெங்காயம் நடவு செய்ய ரூ.7ஆயிரம் கூலியாகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.75ஆயிரம் செலவு ஆகிறது. 60 நாட்களில் அறுவடை செய்யலாம். விளைச்சல் நன்றாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 7 டன் முதல் 8 டன் வரை கிடைக்கும். ஆனால் தற்போது 5 முதல் 6 டன் வரை மட்டுமே கிடைக்கிறது. ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். மத்திய-மாநில அரசுகள் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் சின்ன வெங்காயத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்