'கருப்பன்' யானையை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்:தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதியில்2 யானைகள் விளையாடும் காட்சி பதிவு

‘கருப்பன்’ யானையை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதியில் 2 யானைகள் விளையாடும் காட்சி பதிவாகியுள்ளது.

Update: 2023-04-19 21:50 GMT

ஈரோடு மவாட்டம் தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டங்களுக்கு புகுந்து 'கருப்பன்' என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது. இந்த யானையை வனத்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானையை பாதுகாப்பாக அந்தியூர் அருகே உள்ள தமிழக -கர்நாடக எல்லை வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த யானையை கண்காணிப்பதற்காக வனத்துறையின் சார்பில் தனி குழு அமைத்துள்ளனர். அந்த குழுவினர் மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் கருப்பன் யானை கீழே விழுந்து விடுகிறதா? உணவு எடுத்துக் கொள்கிறதா? என்பது பற்றி தெரிந்துகொள்ள 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

அதன்படி அந்த கண்காணிப்பு கேமராக்களை நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் மதிய நேரத்தில் தமிழ்நாடு-கர்நாடக எல்லை பகுதியான பாலாறு அருகே வைக்கப்பட்டிருந்த தானியங்கி கண்காணிப்பு கேமராவில், உணவு தேடி வந்த 2 பெண் யானைகள் விளையாடும் காட்சிகளும், அவை பாலாற்றுக்கு தண்ணீர் குடிக்க சென்றதும் பதிவாகி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்