தீக்குளித்து வாலிபர் தற்கொலை

செம்பனார்கோவில் அருகே தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-05 16:59 GMT

திருக்கடையூர்:

செம்பனார்கோவில் அருகே தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீக்குளிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பரசலூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் சுரேஷ்குமார் (வயது26).செம்பனார்கோவிலில் தனது தந்தை வைத்திருக்கும் காய்கறி கடையில் வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு சுரேஷ்குமார் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீட்டின் பின்புறம் சென்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் உடல் கருகி படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமார் எதற்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்