லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை

ஊத்தங்கரையில் லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2022-07-16 22:09 IST

ஊத்தங்கரை

திருப்பத்தூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் கமால் (வயது38). இவர் ஊத்தங்கரை காமராஜ் நகர் பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த கமால் கடந்த 11-ந் தேதி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

பலத்த தீக்காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கமால் இறந்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்