பணிச்சுமை காரணமாக 60 மாத்திரைகளை தின்று பெண் டாக்டர் தற்கொலை முயற்சி

வேலகவுண்டம்பட்டி அருகே பணிச்சுமை காரணமாக 60 மாத்திரைகளை தின்று பெண் டாக்டர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Update: 2023-02-11 18:45 GMT

பரமத்திவேலூர்

பெண் டாக்டர்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழிவர்மா. இவரது மகள் பேபிலல்லி (வயது 29). இவர் அரசு மருத்துவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் சேலத்தில் தங்கி அங்கிருந்து தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு காரில் காலையில் வந்து விட்டு மீண்டும் மாலை சேலத்திற்கு சென்று அங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்தும் வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் சேலத்தில் இருந்து மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வந்துள்ளார்.

தற்கொலை முயற்சி

மாலை பேபிலல்லி அறையில் தனியாக இருந்தபோது சுமார் 60 மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 60 மாத்திரைகளை சாப்பிட்டதன் காரணமாக அவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதைப் பார்த்த அங்கு பணியில் டாக்டர்கள் பேபிலல்லிக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் பணிச்சுமை அதிகமாக இருந்ததாகவும், அதனால் அவர் விரக்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்