மாரண்டஅள்ளி அருகே பெண் தற்கொலை

Update: 2023-07-01 19:30 GMT

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள கனவனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சத்யா (வயது 29). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சத்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்