சங்ககிரி
சங்ககிரி அருகே வைகுந்தம் கிராமம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 40). இவர், புதுடெல்லியில் தமிழ்நாடு மாளிகையில் ஊழியராக ேவலை பார்த்து வந்தார். இவருக்கு சினேகா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். காளியப்பன், தன்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சங்ககிரி வைகுந்தம் பகுதிக்கு வந்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இதற்கிடையே கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சினேகா தன்னுடைய குழந்தைகளுடன் தந்தை வீடான நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்துக்கு சென்றார். இந்தநிலையில் மனைவிக்கு, காளியப்பன் போன் செய்ததாக தெரிகிறது. சினேகா போனை எடுத்து காளியப்பனிடம் பேசவில்லை என கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த காளியப்பன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.