தேங்காய் வியாபாரி தற்கொலை

நாகரசம்பட்டி அருகே தேங்காய் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-22 06:45 GMT

காவேரிப்பட்டணம்

போச்சம்பள்ளி அருகே உள்ள விளங்காமுடி பக்கமுள்ள சுத்துக்கல்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 62). தேங்காய் வியாபாரி. இவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்