மனைவி பிரிந்து சென்றதால் வேதனை:லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-05-16 19:00 GMT

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லாரி டிரைவர்

மாரண்டஅள்ளி அருகே பெல்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிபிரியா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூணுப்படுகிறது. இதனால் கவிபிரியா கணவருடன் கோபித்து கொண்டு நார்த்தம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.

தற்கொலை

இதையடுத்து பிரிந்து சென்ற மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு கவிபிரியா வர மறுத்ததால் விரக்தியில் இருந்த மணிகண்டன் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரிந்து சென்ற மனைவி திரும்பி வராததால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்