விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
சங்ககிரி அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
சங்ககிரி
சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி வேப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 70). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கால், கை செயலிழந்தது. இதற்காக அவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் உடல் நலக்குறைவால் மனமுடைந்த மூதாட்டி செல்லம்மாள் நேற்று வீட்டில் விஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பலியானார். இந்த தற்கொலை குறித்து சங்ககிரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.