தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்லில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-23 18:45 GMT

நாமக்கல் - திருச்சி சாலையை சேர்ந்தவர் சரவணன் (வயது41). இவர் திருப்பூரில் தங்கி அங்குள்ள கார்மெண்ட்ஸ் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நாமக்கல் வந்த சரவணன், அங்கு தனியாக தங்கி இருந்தார்.

கடந்த 22-ந் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மனைவி அமுதா, நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சரவணனின் தந்தை பழனிசாமிக்கு சொந்தமான வீட்டை பாகப்பிரிவினை செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் மன உளைச்சல் அடைந்து சரவணன் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்