காரிமங்கலம்:
காரிமங்கலம் அடுத்த கும்பாரஅள்ளி ஊராட்சி காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 50). விவசாயி. தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ராஜா பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராஜா வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொைல செய்து கொண்டார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.