கட்டிட தொழிலாளி தற்கொலை

கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-17 18:45 GMT

வாடிப்பட்டி, 

வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஒச்சா தேவன் (வயது 49), கட்டிட தொழிலாளி. இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று அதிகாலை வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்