விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
ஓசூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்
ஓசூர் அருகே உள்ள கூஸ்தனப்பள்ளியை சேர்ந்தவர் அசோக் (வயது38). தொழிலாளி. இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் அசோக், மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அசோக் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.