பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரியகம்மாளப்பட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 56). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்க வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கூறினார். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் சொக்கலிங்கம் தனது விவசாய நிலத்தின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று சொக்கலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.