விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கல்லாவி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை
கல்லாவி அருகே திருவணப்பட்டியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (வயது29). விவசாயி. இவருக்கு சமீப காலமாக கடன் அதிகரித்துள்ளது. இதில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.