தர்மபுரியில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை

Update: 2023-01-11 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மணிகண்டன் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக கடந்த சில நாட்களாக சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மணிகண்டன் இறந்திருப்பது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்